பாராளுமன்ற வளாகத்தில் 1000 ரூபா சம்பள போராட்டம் ?
தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபா சம்பள போரட்டம் கடந்த வருடத்திலிருந்து இன்றும்வரை தொடர்கின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த சத்தியேந்தரா தொடர்ந்தும் உடம்பில் 1000 வேல்களை குத்தி அகரப்பத்தனையில் இருந்து கொழும்புக்கு நடைபயணம் மேற்கொண்டு .ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை வழங்கினார்.
எனினும் இந்த சம்பள பிரச்சனையில் சாதகமான பதில்கள் கிடைக்காததன் காரணமாக இன்றும் (05/02/2019) வேல்களை மீண்டும் உடம்பில் குத்தியவாறு பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தை நீக்கி தனி நபர்கள் ஆதிக்கம் இல்லாமல் அரசாங்கம் பாராளுமன்ற சட்டத்துக்குள் உள்வாங்கி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையை தீர்த்து வைக்கவேண்டும் . தோட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளோடு அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இதற்கும் சரியான முடிவு கிடைக்காவிடின் எனது போராட்டத்தை தொடர்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.