சினிமா

பாலிவுட்டில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்! ஒரே நேரத்தில் இத்தனை படங்களா?

சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என முன்பு தகவல்கள் வெளியான நிலையில், அது உண்மையில்லை அவர் நடிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷை தேடி தற்போது பாலிவுட் பட வாய்ப்புகளும் குவிய துவங்கியுள்ளது. Badhaai Ho பட புகழ் இயக்குனர் அமித் ஷர்மாவின் படத்தின் மூலம் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் Nagesh Kukunoor தன் அடுத்த படத்தில் நடிக்கும்படி கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளாராம். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம். ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் அந்த படத்தை வெளியிடவுள்ளார்களாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button