செய்திகள்

‘பால்மா’ விலை அதிகரிப்பு உறுதியானது

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிவர்வத்தியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.

Related Articles

Back to top button