மலையகம்

பிக்குகளுக்கு எதிராக ‘குரல் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளவும்’

பிக்குமார்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது அவதூறு பேசும் நாட்டின் ஆட்சியாளர்களான அமைச்சர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.

பௌத்த மதகுருமார்களை இழிவுப்படுத்தும் செயற்பாட்டை, ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தலையிட்டு நிறுத்தக் கோரி, மலைநாட்டு முற்போக்கு மக்கள் அமைப்பினர் கினிகத்தேனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில், இன்று (25) காலை 10.30 மணியளவில், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்கு அனுப்பி வைக்கக்கூடிய தபால் அட்டைகளும் மக்களிடம் கையொப்பம் இட்டு பெறப்பட்டன.

இங்கு தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எலப்பிரிய நந்தராஜ்,

“பௌத்த நாட்டில் பிக்குகளுக்கு உரித்த மரியாதையை வழங்காத பட்சத்தில், பௌத்த நாடு என்று சொல்லுவது கேள்விக்குறியாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்கள், அவ்வப்பகுதியில் பிக்குகளிடம் ஆசீர்வாதங்களைப் பெற்று, அவரவர் பதவியில் அமர்கின்றனர். இவ்வாறு ஆசிகளைப் பெற்று, பதவியில் அமரும் அமைச்சர்கள், பிக்குகளுக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றனர்.

“இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரியே, இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் தபாலட்டை கையொப்பம் பெறலும் முன்னெடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

Related Articles

24 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button