மலையகம்

பிச்சை வேண்டாம் சம்பளம் கொடு! போராட்டத்தில் குதித்த அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள்…

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அக்கரப்பத்தனையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தை இன்று அக்கரப்பத்தனை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, 1000ரூபா சம்பளம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் , தீபாவளி முற்பணமான 10,000 ரூபா வேண்டும், பிச்சை வேண்டாம் சம்பளம் கொடு என்று கோஷங்களை எழுப்பி பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இதில் இந்த பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

 

 

 

 

Related Articles

42 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button