செய்திகள்

பிணை முறி விவகாரம் தொடர்பில் சந்தேகம் – பிமல் ரத்னாயக்க

பிணை முறி விவகாரம் குறித்த கணக்காய்வு அறிக்கை தேவையற்றது எனக்கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க் கட்சியாக இருந்தபோது மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக  பரவலாக கருத்துக்களை  வெளியிட்டு வந்தது. ஆனால் தற்போது ஆட்சிபீடம் ஏறியவுடன் மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் பின் வாங்குகின்றது.

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை தேவையற்றது என்று கூறுவதன் ஊடாக அவர்களும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவேதான் மத்திய வங்கி பிணை முறி மோசடி பற்றிய கணக்காய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென நாம் வலியுறுத்தினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button