பின்வாங்காமல் குரல் கொடுப்போம் மலையக ஆசிரியர் ஒன்றியம்..?
பொறுப்பற்ற கல்வி உயர் அதிகாரிகளினால் பல்வேறு வகையிலும் பாதிப்படைந்துள்ள ஆசிரியர் சமூகத்துக்காக இனி பின்வாங்காமல் குரல் கொடுக்க மலையக ஆசிரியர் ஒன்றியம் முன்வரும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
எதேச்சதிகாரமான செயற்பாடுகள் இன்று, அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, என்றுமில்லாத வகையில், அதிகரித்துள்ள நிலையில் மலையக ஆசிரிய சமூகத்தின் இந்த ஒன்றுதிரண்ட எதிர்ப்பலையானது என்றுமில்லாதவாறு நடந்தேறியுள்ளது.
இச்சக்தியின் வேகத்தை-ஆசிரியர்களின் தார்மீக கோபத்தை உணர்ந்து, இப்போதாவது கல்வி அதிகாரிகளும் அவர்களை வழிநடத்தும் பின்னடைந்த இவ் அரசியல்வாதிகளும் ஆசிரிய சமூகத்திற்கு எதிரான தத்தமது எதேச்சதிகார நடவடிக்கைகளை மீளாய்வு செய்துக்கொள்ளல் வேண்டும்.
அப்படி அவர்கள் மீளாய்வு செய்யாதவிடத்து, மலையக ஆசிரியர் ஒன்றியமானது இனிவரும் காலங்களில் காலங்களில் ஆசிரிய நலன்களை , காக்கும் பொருட்டு மேலும் காத்திரமான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.