செய்திகள்

பியகம பகுதியில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது…

பியகம பகுதியில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 20 போலி நாணயத்தாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடுவளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணம், ஹோமாகம பிட்டிப்புர பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது போன்ற போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு, கைமாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பண்டிகைக்காலங்களில் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது, நாணயத்தாள்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com