உலகம்

பிரக்ஸிட் தொடர்பில் பிரித்தானியாவின் புதிய தீர்மானம்.

ப்ரெக்சிட் தொடர்பான இரண்டாவது பொதுவாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கவுள்ளதாக பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பைன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக்கெடுப்பின் முடிவைக்கொண்டு நாட்டை மீள ஒன்றிணைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஜெரமி கோர்பைன், டிசம்பர் 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகும் முனைப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்கனவே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ப்ரெக்சிட் நடவடிக்கையை முன்னெடுக்க பொரிஸ் ஜோன்சன் எத்தணித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வௌியேற புதிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட தொழிற்கட்சி உத்தேசித்துள்ளது.

Related Articles

Back to top button