அரசியல்

பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு சில நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்சவிற்கு இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்​கெடுப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக 41 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் வழங்கபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button