செய்திகள்

பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது – ரணில்

எவ்வாறான பிரச்சினைகள் நிலவினாலும் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


தொழில் அமைச்சிக்குரிய புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார். 


நான்காவது தொழில் புரட்சியில் மனிதவளம் மற்றும் இயந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் அதற்கேற்ப தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் கூறினார். 


கடந்த ஐந்து வருடங்களில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு முக்கியதுவமளித்த நாடாக இலங்கை காணப்படுவதாகவும் பொருளாதார ஒழுங்கமைப்பு விடயங்களில் பல்வேறு பிரிவுகளின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.


தற்போதும் நாடு கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஆனால் எவ்வாறான பிரச்சினைகள் நிலவினாலும் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். 


நாட்டில் உள்ள சகல பகுதிகளிலும் வருமானம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். 

Related Articles

Back to top button
image download