...
உலகம்

பிரட்டனின் எலிசபெத் மகாராணி 8 ஆண்டுகளுக்குப் பின் மருத்துவமனையில் ஒரு நாள் தங்கியுள்ளார்.

அவருக்கு மருத்துவமனையில் ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனை இடம்பெற்றதாக அரச அதிகாரிகள் கூறினர். அதன்பின்னர் அவர், விண்ட்ஸரில் உள்ள அரண்மனைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக நீண்டகாலம் அரசியாக இருந்து வரும் அவர், உடல்நலம் குன்றியதால், அயர்லாந்துக்கான அதிகாரத்துவப் பயணத்தை இரத்து செய்திருந்தார்.

எனினும் அவரது உடல்நலக் குறைவு, கொவிட்-19 நோய்த்தொற்றுடன் சம்பந்தப்பட்டதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.  

95 வயதான எலிசபெத் மகாராணி கடைசியாக 2013 ஆம் ஆண்டு இரைப்பை அழற்சி நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் தனது ரோமுக்கான விஜயத்தையும் இரத்துச் செய்தார். அதற்கும் முன்னர் 2003 ஆம் ஆண்டு அவரது வலது முழங்காலில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen