உலகம்செய்திகள்

பிரதமர் மோடிக்கு நெருக்கடி தரும் எதிர்க்கட்சிகள் : இந்தியாவில் அடுத்து என்ன நடக்கபோகிறது ?

இந்தியாவின் பிரதான 12 கட்சிகள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளன.

9 முக்கிய விடயங்களை குறிப்பிட்டே 9 கட்சிகளும் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை தவிர ஏனைய 12 முக்கிய கட்சிகளும் கொரோனா கட்டுப்பாடு குறித்து கடிதம் அனுப்பியுள்ளன. உள்நாடு மற்றும் உலக அளவில் கிடைக்கும் வாய்ப்புகளில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க கட்டாய உரிமம் வழங்குமாறும் கொரோனா பரவல் சூழ்நிலையில், அதிக நிதியில் நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணியை நிறுத்தவும் எதிர்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 35,000 கோடி இந்திய ரூபாவை கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு செலவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு தானியங்களை விநியோகிக்கவும், போராடும் விவசாயிகள் தங்கள் பணிக்குத் திரும்பி தானிய உற்பத்தியில் பங்களிக்க, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் சோனியா காந்தி, தேவகவுடா, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஹேமந்த் சோரன், ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஹெச்.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com