அரசியல்செய்திகள்

பிரதமர் ரணில் இன்று இராஜிநாமா – காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகியதுடன் 15 பேர் கொண்ட காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற தேர்தலையும் உடனடியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்று 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் இருப்பதனால் நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும்வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பல முக்கிய அமைச்சர்கள் கடந்த இரு நாட்களில் ராஜினாமா செய்திருந்தனர்.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
image download