மலையகம்

பிரதே சபை சட்டமூலம்- மலையக மக்களுக்கு மாற்றங்கள் கிடைக்கும்!

 

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த கரங்களாக குரல்கொடுக்க தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அதிகார சபை மற்றும் பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றும் போதே ஸ்ரீ தரன் இதனைத் தெரிவித்தார்.

500ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, அடிப்படை வசதிகளின்றி லயங்களில் நில வசதி இல்லாமல் வேலைக்காரர்களாக மலையக பெருந்தோட்ட மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக இந்த மக்களின் பல எதிர்பார்ப்புகளை எந்த அரசாங்கமும் முன்வராத நிலையில், இந்த அரசாங்கம் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகளை செயற்படுத்த முன்வந்தமைக்கும், இந்த முயற்சியை மேற்கொண்ட அமைச்சர் திகாம்பரத்துக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

பிரதேச சபையிடமிருந்து வருமான வரி, வரி வசூலிப்பு என்பவை இந்த மக்களிடம் அறவிடப்பட்டாலும்,பிரதேச சபைகள் மூலம் இந்த மக்களுக்கு எவ்வித சேவைகளும் இதுவரை கிடைக்கவில்லை.

அத்துடன் இன்று கொண்டுவரப்பட்டுள்ள பிரதே சபை சட்டமூலம் மலையக மக்களுக்கு மாற்றங்கள் கிடைக்குமெனவும் இவற்றை மலையக அரசியல் தலைமைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button