செய்திகள்விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர்கள் LPL 2021 ஏலத்தில்

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள 2021 ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் T20 தொடரில் விளையாடுவதற்காக பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது பெயர்களை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிரகாரம், இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள LPL T20 தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுப்பதற்கு தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்ட வீரர்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகீப் அல் ஹசன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர்களான பென் கட்டிங், ஜேம்ஸ் போல்க்னர் தென்னாபிரிக்க ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவர் டெம்பா பெவுமா ஆகிய வீரர்கள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றனர்.

நியூசிலாந்தின் மிச்செல் மெக்லனகன், மேற்கிந்திய தீவுகளின் நிகோலஸ் பூரான், ரவி ராம்போல் போன்ற முன்னணி வீரர்களும் LPL T20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர்.

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ அரங்கில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button