செய்திகள்
பிரபல சிங்கள நடிகர் சுனில் பிரேமகுமார காலமானார்

பிரபல சிங்கள நடிகர் சுனில் பிரேமகுமார இன்று காலை காலமானார்
இவர் நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்ததுடன்,சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடிகர் தனது 62 வயதிலேயே இயற்கை எய்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரின் பூதவுடல் தற்பொழுது அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏராளமான இலங்கைத் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்திவருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.