செய்திகள்

இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 728, 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 540, 000க்கும் அதிகமானோருக்கான இரண்டாம் செலுத்துகைக்காக குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 526, 000 பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ளனர்.

இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், எஞ்சிய தடுப்பூசிகளை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button