சமூகம்
பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க காலமானார்
பிரபல பாடகி பேராசிரியை அமரா ரணதுங்க திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக காலமானார்.
அவர் நேற்று (15) இரவு காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 79 வயதில் காலமானார்.
இவர் பிரபல பாடகர் தயாரத்ன ரணதுங்கவின் மனைவி என்பதுடன் இலங்கை இசைத்துறையின் முதலாவது பேராசிரியையும் ஆவார்.
மேலும், அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.