செய்திகள்

பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் மனைவி கைது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சிவா என்பவரின் மனைவி தலங்கம பகுதியில் கைது
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 07 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின்
கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனையூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தில் 500 இலட்சம்
ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அதிசொகுசு ஜீப் ஒன்றும் இரண்டு வேன்களும்
காரொன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம்
வழங்கியுள்ளார்.

இந்த வாகனங்கள் தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, 07
நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button