செய்திகள்

பிரபல வர்த்தகரின் கொலையில் 4 வருடங்களின் பின் மகன் சிக்கினார்.

பிரபல வர்த்தக பிரமுகர் குலாம்ஹுசைன் கொலை தொடர்பில் அவரது இளைய மகன் சபீர் அபாஸ் இன்று சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஜூன் மாதம் 9 ம் திகதி குலாம்ஹுசைன் அவரது வீட்டில்உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

அடம்எக்ஸ்போர்ட் உட்பட 9 நிறுவனங்களின் உரிமையாளரான அவரின் மரணம் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டு முறைப்பாடுகள் வெளியானதை தொடர்ந்து; உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரதேச பரிசோதனை இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சி.ஐ.டி.யினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர் தந்தையின் மரணம் தொடர்பில் 37 வயது இளைய மகன் சபீர் அபாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையை துல்லியமாக திட்டமிட்டு தந்தையின் மரணம் இயல்பானதொன்று என காண்பித்தார் இளைய மகனென சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
image download