...
உலகம்

பிராணவாயுவை எடுத்துவர கடற்படை கப்பல் இந்தியா புறப்பட்டது

கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கு தேவையான மேலதிக பிராணவாயுவை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று புறப்பட்டுச்சென்றுள்ளது.

இலங்கை கடற்படைக்கு  சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து  சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் மேலதிக பிராணவாயு தேவையை பூர்த்திசெய்ய 100 டன் பிராணவாயுவை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen