உலகம்செய்திகள்

பிரான்ஸில் தடுப்பூசி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பிரான்ஸில் கொவிட் தடுப்பூசி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் உட்பட ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே உள்நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பிரான்ஸ் நாட்டுத் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Back to top button