சினிமா
பிரிட்டனிலும் மெர்சலான தளபதி படம்
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’.இயக்குனர் அட்லி இயக்கிய இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா , சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தங்களது 100 வது படமாக பிரம்மாண்ட முறையில் தயாரித்திருந்தது.
இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் நாட்டில் பெரிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது.