பிரிட்டனில் பரவும் வீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம்.

uthavum karangal

பிரிட்டனிலும் தென்னாபிரிக்காவிலும் பரவிவருகின்ற வீரியமிக்க ஆபத்தான வைரசினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பிரதிஇயக்குநர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவீரியமிக்க வைரசினால் பாதிக்கப்பட்டவரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கட்டாய பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை இது குறித்து தேவையற்ற அச்சத்திற்குள்ளாகவேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தினக்குரல்

தொடர்புடைய செய்திகள்