உலகம்செய்திகள்

பிரித்தானிய சுற்றுளா பயணிகளுக்கு அமெரிக்க விதித்துள்ள புதிய விதிமுறை.

பிரித்தானியாவிலிருந்து வருகை தருவோர், தமக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை
உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவை வந்தடைந்து 72 மணித்தியாலங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட
வேண்டுமென அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை, நாளை முதல் அமுல்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையிலேயே
அமெரிக்காவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தொடர்பில் வொஷிங்டனிலுள்ள
பிரித்தானிய தூதரகத்தினால் எந்தவொரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

Related Articles

Back to top button