செய்திகள்

பிறந்தநாள் கொண்டாடிய 19 பேருக்கு நேர்ந்த கதி.!

அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர், அதே விடுதியில் கட்டாய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.அல்லைப்பிட்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் நேற்று மாலை நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதையறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினர். சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button