அரசியல்செய்திகள்

பிறந்திருக்கும் புத்தாண்டில் வளமும் நலமும் பொங்கி எழுந்திட வாழ்த்துகின்றேன்-இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்..

பிறந்திருக்கும் 2021ம் வருடம் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் மாற்றமும் மலர்ச்சியும் நிறைந்ததாக மலரவேண்டும்.

நியாயமான சம்பள நிர்ணயம், தனி வீட்டுத்திட்டம், கொரோனா தொற்று உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் சுபீட்சமும் சௌபாக்கியமும் கிட்டுமென நம்பிக்கையுடன் வாழ்த்து தெரிவிப்பதில் மனநிறைவடைகின்றேன். என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார். 

அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது உதயமாகியிருக்கும் இப்புத்தாண்டு எமக்கு சாதனை ஆண்டாக இருக்கவேண்டுமென்பதே எமது இலக்கு, சதாகாலமும் பின்தங்கிய நிலையில் எமது மலையக சமூகம் வாழமுடியாது தவிர பொருளாதார ரீதியில் அவர்கள் நிலையான அடித்தளத்தை கொண்டிருப்பது முக்கியம்.
 

எனவே நாம் காலத்திற்கேற்ற வகையில் சிந்தித்து செயலாற்ற வேண்டியது அவசியம். 
அந்தவகையில் தொடர்ந்தும் எமது சமூகம் இ.தொ.காவுடன் கைகோர்த்து பயணிக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதோடு அனைவருக்கும் வளமும்,நலமும்  பொங்கி வழிந்திட உளமார இறைவனை பிராத்திக்கிறேன் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button