செய்திகள்

பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த தாய்; திருமலையில் சம்பவம்!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாயை இன்று(12) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்ரஸாநகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிறந்த சிசு பெண் குழந்தையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு குறித்த சிசு பிறந்துள்ளதாகவும், பிறந்த சிசுவினை கொலை செய்து எரித்துள்ள நிலையில் அதனை தெருநாய்கள் கவ்விச் சென்றுள்ளன.

இந்த நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சிசுவினை பிரசவித்த பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.

Related Articles

Back to top button