உலகம்

பிறந்த நாளன்று பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார் மோடி

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி நேற்றுதனது 69 ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடி னார்.

பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்த நாளை பிரதமர் மோடி கொண்டாடியுள்ளார்.

குஜராத்- கேவாடியாவிலுள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் பையில் அடைக்கப்பட்ட பல வண்ண பட்டாம் பூச்சிகளை சுதந்திரமாக பிரதமர் மோடி பறக்கவிட்டுள்ளார்.

இவ்வாறு பிறந்த நாளை கொண்டாடி வரும் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க.தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button