அரசியல்

பிறப்புச் சான்றிதழில் குறித்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய யோசனை

பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என இன ரீதியாக அடையாளப்படுத்துவதை மாற்றி இலங்கையர்கள் என அடையாளப்படுத்தும் நடைமுறையை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்க வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் என பிரிந்திருப்பதை தவிர்த்து, மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் செயற்பட்டால் இலங்கையை ஒன்றிணைக்க முடியும்.

இந்த நிலையில், பிறப்புச் சான்றிதழ் வழங்குவது தமது அமைச்சின் செயற்பாடாகும். இயலுமானால், பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இன ரீதியாக அடையாளப்படுத்துவதை தவிர்த்து, இலங்கையர் என்று எதிர்காலத்தில் அடையாளப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button