உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸ் விமான விபத்து: 29 பேர் பலி, 50 பேர் படுகாயம்

பிலிப்பைன்ஸில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் பிலிப்பைன்ஸில், இராணுவ விமானமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 96 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் 17 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதா, அல்லது நாசவேலை காரணமாக இந்த சம்பவம் நேரிட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button