உலகம்

பிளாஸ்டிக்கை உண்ணும் விசித்திர பக்றீரியாக்கள்.

பிளாஸ்ட்டிக்கை உண்ணும் இரண்டு வகையான விசித்திர பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பக்டீரியாக்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளை உடைத்து அதனை உக்கச் செய்யும் திறன் படைத்தவை என
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரண்டு வகை பக்டிரியாக்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நீர் நிலையில் கண்டறிந்துள்ளதாகவும் ஆய்வுக்குழு தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் உலகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள பிளாஸ்டிக்கை இயற்கையான முறையின் மூலம் உக்கச் செய்யும் கனவு நனவாகியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Back to top button