செய்திகள்

பி.பி.சி” செய்தியாளர் அருண் பிரசாத்துக்கு அச்சுறுத்தல் -பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு..

சிரேஷ்ட ஊடகவியலாளரான ரஞ்சன் அருண் பிரசாத் அவர்களின் இறக்குவானை வீட்டிற்கு ஒரு சிலர் சென்று விசாரணைகளை நடத்தி இருப்பதாக தெரியவருகிறது.

இவர் கடந்த மாதம் தமது புகைப்படவியலாளருடன் வடக்கின் யாழ்ப்பாணம் , வவுனியா, கிளிநொச்சி உட் ப்பட பல பகுதிகளில் செய்தி சேகரிக்க சென்று இருந்தார்.

BBC செய்தி சேவைக்காக அங்கு பல்வேறு செய்திகளை இவர் எடுத்து கொண்டிருந்தது போது இவரை குழுவொன்று பின் தொடர்ந்து ஆராய்ந்துள்ளது.

இதன் பின்னர் அருண் பிரசாத் கொழும்பு திரும்பியுள்ளார் .

இந்த நிலையில் இரத்தினபுரி இறக்குவானையில் உள்ள அவரது வீட்டிற்கும் கண்டியில் உள்ள அவரின் உறவினர் வீட்டிற்கும் ஒரு சிலர் ( புலானாய்வு பிரிவா / ஒட்டுக்குழுவா) சென்று விசாரணை நடத்தியதாக பொலிஸ் தலைமையகத்தில் இன்று (03/03/21) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை ஊடகவியலாளர் அருண் பிரசாத் செய்துள்ளார்.

இவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button