செய்திகள்நுவரெலியா

பீரட் தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு திகா-உதயா நிவாரணத் திட்டத்தின் கீழ் உதவி!

டிக்கோயா பீரட் தோட்டத்தில் கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட 14 குடும்பங்களுக்கு திகா-உதயா நிவாரணத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதி தலைவர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார்
அவர்களின் எற்ப்பாட்டில், முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின்
பொதுச் செயலாளர் பிலிப், பிரதிப் பொதுச்செயலாளர் கல்யாணகுமார், பாராளுமன்ற உறுப்பினர் உதய குமாரின் இணைப்பாளர் ஸ்ரீதர், பிரதேச அமைப்பாளர் கேசவன் ஆகியோர் குறிப்பிட்ட தோட்டத்திற்குச் சென்று இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய பீரட் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று யுவதிகள் கொரோனா சிகிச்சை நிலையமொன்றில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மூன்று யுவதிகளோடு சம்பந்தப்பட்ட பீரட் தோட்ட தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாகவோ பிரதேச சபை ஊடாகவோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாகவோ அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் இதுவரை எவ்விதமான நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை.

Related Articles

Back to top button