உலகம்

புகழ்பெற்ற தாம் லூங் குகை மீள திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக தாய்லாந்தின் தாம் லூங் குகை மீளத்திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தக் குகைக்குள் சென்ற 12 சிறுவர்களும், அவர்களின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரும் திடீரென ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி, பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின்னர், இந்தக்குகை தற்போது முதன்முறையாகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்தக்குகை மீளத்திறக்கப்பட்டதும் சுமார் இரண்டாயிரம் சுற்றுலாப்பயணிகள் அதனுள் சென்று பார்வையிட்டதாக பாங்கொக் போஸ்ட் செய்தி வௌியிட்டுள்ளது.

குகையில் சிறுவர்கள் சிக்கி 17 நாட்களின் பின்னரே அவர்கள் மீட்கப்பட்டிருந்ததுடன், இந்தச் சம்பவம் இடம்பெற்று 15 மாதங்களின் பின்னர் இந்தக்குகை மீளத்திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button