செய்திகள்

புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

விஷேட பேருந்து சேவை ஆரம்பமாகும் போது புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விஷேட பேருந்து சேவை இன்று (08) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் 22 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை உரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் புகையிரத சேவையின் பல பிரிவு ஊழியர்கள் நாளை (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புகையிரத ஓட்டுனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com