செய்திகள்

புகையிரத சேவையை அத்தியாவசியமாக அறிவித்து மீண்டும் அதிவிசேட வர்த்தமானி.

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின்படி, புகையிரத சேவையை நேற்றிலிருந்து  அத்தியாவசிய சேவையாக அறிவித்து இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதற்கமைய பயணிகள் மற்றும் அனைத்து விதமான பொது போக்குவரத்து சேவைக்கான புகையிரத சேவைகள், புகையிரதங்களின் பராமரிப்பு மற்றும் சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட புகையிரத துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் உள்ளடங்கும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதமும் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download