...
செய்திகள்

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த முடியாது- ஸ்.ஜே.விதானகே தெரிவிப்பு

இலாப நட்டத்தை மதிப்பிடுவதற்கு புகையிரத சேவை வியாபாரமல்ல. அநாவசியமான அரசியல் தலையீடுகளே புகையிரத சேவை  நட்டமடைவதற்கு பிரதான காரணியாக அமைகிறது. 

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான 13000ஆயிரம் ஹேக்கர் காணியை கொள்ளையடிப்பதற்காக அரசாங்கம் புகையிரத சேவையினை தனியார் மயப்படுத்த முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஜே.விதானகே தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புகையிரத சேவை நட்டமடைந்துள்ள என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.சுகாதார அமைச்சு,தபால் சேவை,கல்வி அமைச்சு,துறைமுக அதிகார சபை,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவை நட்டமடைந்துள்ள நிறுவனங்கள்.

இந்நிறுவனங்கள் அனைத்தும் சேவை அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. புகையிரத சேவையினை மாத்திரம் தனியார் மயப்படுத்த ஆட்சியில் இருந்த அனைத்து

அரசாங்கங்களும் கவனம் செலுத்தியுள்ளன.

அநாவசிய அரசியல் தலையீடுகளினால் புகையிரத சேவை நட்டமடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலத்தில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 10 புகையிரத என்ஜின்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து புகையிரத என்ஜின்களை பெற வேண்டாம் என புகையிரத தொழினுட்ப குழு பல முறை வலியுறுத்தியும் அப்போதைய அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.

22 கோடி பெறுமதியிலான 10 புகையிரத என்ஜின்களில் தற்போது 2 என்ஜின்கள் மாத்திரமே பாவனைக்கு ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.ஏனைய 8 என்ஜின்கள் புகையிரத களஞ்சியசாலையில் பயனற்ற வகையில் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும பதவி வகிக்க போது சீனாவில் இருந்து 100 புகையிரத பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த புகையிரத பெட்டிகள் பயணிகள் புகையிரத சேவைக்கு பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வகையில் காணப்படுகின்றன. இந்த இறக்குமதி ஊடாக பாரிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து 10 புகையிரத என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இவை எமது நாட்டு பாவனைக்கும், புகையிரத சேவை கட்டமைப்பிற்கும் பொருத்தமற்றது என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒரு என்ஜியின் பெறுமதி 76 கோடியாகும். 10 என்ஜின்களில் 2 தான் பாவனைக்கு ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் தான் புகையிரத சேவை நட்டமடைந்துள்ளது.

புகையிர சேவை வியாபாரமல்ல நட்டமடைவதற்கு மக்களுக்கான சேவையில் இலாபத்தை எதிர்பார்க்க முடியாது. 

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து புகையிரத சேவையினை தனியார் மயப்படுத்த அரசாங்கம் பல வழிமுறைகளில் முயற்சித்துள்ளது. புகையிரத தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் காரணமாக அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சமான கொள்கை புகையிரத சேவையினை தனியார் மயப்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான 13 ஆயிரம் ஹேக்கர் காணியை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை அரசியல்வாதிகள் கையகப்படுத்தியுள்ளார்கள்.புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen