சமூகம்
புகையிரத பெட்டிகளில் திடீரென தீப்பரவல்

கொழும்பு – தெமட்டகொடை புகையிரத தரிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று புகையிரத பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு தரித்து வைக்கப்பட்டுள்ள புகையிரத பெட்டிகளிலேயே தீப்பரவல் ஏற்பட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதாக அந்தப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.