செய்திகள்

புகையிர சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானி வௌியானது.

புகையிர சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்திடமிருந்து அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு  இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று மாலை கையெழுத்திட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தமானியை அச்சிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஊழியர்கள் இன்று தொடர்ச்சியாக எட்டாவது நாளாகவும் பணிபுறக்கணிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download