செய்திகள்

புகையிலை பாவனை குறித்து நாடளாவிய ரீதியிலான ஆய்வு ..?

புகையிலை பாவனை குறித்து நாடளாவிய ரீதியிலான ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை இந்த ஆய்வை ஆரம்பித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

புகையிலை மற்றும் சிகரட் பாவனையாளர்களின் வயதின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இதன்பிரகாரம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை சுமார் பத்தாயிரம் பேர் வரையில் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Back to top button