...
செய்திகள்

புசல்லாவை, சரஸ்வதி மத்திய கல்லூரியிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக 6 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு..

2020 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி (Z-Score)  இன்று வெளியானது.
அதற்கமைய, புசல்லாவை, சரஸ்வதி மத்திய கல்லூரியிலிருந்து வரலாற்றில் முதல் தடவையாக 6 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதன்படி, கலைப்பிரிவிற்கு ஒருவரும் சங்கீத பிரிவுக்கு நால்வரும் நடன பிரிவுக்கு ஒருவரும் என 6 பேர் தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் யாழ் பல்கலைகழகத்திற்கு இருவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு நால்வரும் தெரிவாகியுள்ளனர்.
பாடசாலையிலிருந்து வருடந்தோறும் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் ஒரே தடவையில் 6 பேர் தெரிவாகியிருப்பது வரலாற்றில் முதல் தடைவை இதுவாகும். 
இது பாடசாலை வரலாற்றுப் புத்தகத்தில் பெரும் சாதனையாக பதிவாகியுள்ளது.
எனினும், அடுத்த வருடம் இதனை விட அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவார்கள் என்ற அதீத நம்பிக்கையுடன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கற்பித்த ஆசிரியர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்த்திய வாழ்த்துக்கள்….
Dharmaraj

Related Articles

Back to top button


Thubinail image
Screen