கல்விசெய்திகள்

புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிபர்கள்.

பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்தற்காக ஆயிரத்து 859 அதிபர்களுக்கு நியமனங்களை வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த தினங்களில் நடைபெற்ற நேர்முக பரீட்சைகளினூடாக அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டவுள்ளனர்.

புதிய அதிபர்களுக்கான நியமனங்கள், தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற அதிபர்களுக்கான போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே, புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நியமனங்கள் வழங்கப்பட்ட அதிபர்கள், ஆறு வார கால பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் அவர்கள் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button