உலகம்

புதிதாக 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு – மோடி

நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.மத்திய அரசுப் பணிகளில் 10 இலட்சம் பேரை நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள இலட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காலியாக இருக்கும் 10 இலட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button