அரசியல்செய்திகள்

புதிய அரசாங்கம் பொதுத்தேர்தலுடன் மக்கள் கருத்துக்கணிப்பையும் நடத்த வேண்டும் என கோரிக்கை.

புதிய அரசாங்கம் பொதுத்தேர்தலுடன் மக்கள் கருத்துக்கணிப்பையும் நடத்த வேண்டும் என, பெத்பைன்டர் (Pethfinder) அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 86 ஆவது சரத்தின் கீழ், இதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என, அறிக்கையொன்றின் ஊடாக மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

1.ஜனாதிபதியை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற முறையா, வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறையா மிகவும் சிறந்தது

2.மாகாண சபைகளை நீக்கி, உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துதல்

3.விருப்பு வாக்கு முறையை நீக்கி, பொதுத் தேர்தலிலுக்காக விகிதாசார கலப்பு முறையை ஏற்படுத்தல்

4.மத, இன மற்றும் வலய ரீதியான பல்வகைமையுடன் தொடர்புடைய தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான, செனட் சபையொன்றை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குதல்

போன்ற விடயங்கள், மிலிந்த மொரகொடவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளாகும்.

Related Articles

Back to top button