அரசியல்

புதிய ஆளுநர்கள் மூவர் நியமனம்..

ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன்படி, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும், மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் தமது நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக்கொண்டனர்.

மத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய மைத்ரி குணரத்ன தனது பதவியை நேற்று முன்தினமும் தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய கீர்த்தி தென்னக்கோன் நேற்றும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button