செய்திகள்

புதிய கூட்டமைப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது..

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்த புதிய கூட்டமைப்பிற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கட்சியின் ஊடாக போட்டியிடுவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டமைப்பு இதுவாகும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

17 கட்சிகள் இருப்பினும் அனைவரும் ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்றிணைந்துள்ளதாகவும் நாட்டை நேசிக்கும் கட்சிகளே கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெற்றி பெற்ற பின்னர் தன்னுடைய காலத்தில் அனைத்து மக்களுக்காகவும் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அதற்காக அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடனும் தேர்தலிற்கு முன்னரே 56 வீதம் முன்னிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் உள்ளடங்கும் 17 கட்சிகளின் விபரம் வருமாறு,

ஶ்ரீ லங்கா பொதுஜன

மகஜன எக்சத் பெரமுன

ஶ்ரீலங்கா கமியூனிடிஸ் கட்சி

இலங்கை சமசமாஜ கட்சி

ஜனநாயக இடதுசாரி முன்னணி

தேசிய சுதந்திர முன்னணி

பிவிதுரு ஹெல உருமய

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

விஜயதரணி தேசிய சபை

தேசிய காங்கிரஸ்

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி

தேச விமுக்தி ஜனதா பக்‌ஷய

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

ஜக்கிய மக்கள் கட்சி

முற்போக்கு தமிழ் கட்சி

Related Articles

Back to top button