அரசியல்செய்திகள்

புதிய கோப் குழு நியமிக்கப்படும் வரை முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை இரகசியமாக வைக்க தீர்மானம் ?

புதிய கோப் குழு நியமிக்கப்படும் வரை முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை இரகசியமாக வைக்க கோப் குழுவின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தீர்மானித்துள்ளார்.

தடயவியல் கணக்கறிக்கை தொடர்பிலான 05 அறிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கணக்கறிக்கைகளை கோப் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே கையாள முடியும் எனவும் சட்ட நடவடிக்கைகளுக்காக மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதால் அவற்றை இரகசியமாக பேண தீர்மானித்துள்ளதாக சுனில் ஹந்துனெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button