செய்திகள்

புதிய சட்டங்களை உருவாக்க இலங்கை்கு உதவி – அறிவித்தது இங்கிலாந்து.

சிறைச்சாலைகள் மறுசீமைப்பு மற்றும் சட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.

நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவுடனான சந்திப்பின்போதே பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது புதிய அரசினால் சட்டத் துறையில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாது சிறைச்சாலை பிரிவில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்புகள் குறித்தும் அமைச்சரினால் உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் விசேட தெளிவூட்டல்களை வழங்குவதற்கும் பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அரசாங்கத்துக்கு தமது பாராட்டுக்களையும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசின் கீழ் நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் நீதியை சமமான வகையில் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையும் திட்டமும் எனவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

அதன்படி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே விதமான சேவையை வழங்க அரசாங்கம் செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
image download